திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் தினசரி 300- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏற்கெனவே திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்றாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் தட்டுப்பாடு நிலவுவதை தவிர்க்கும் வகையில் கூடுதலாக ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நாள் ஒன்றுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 1500 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் அளவில் தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைக்கக்கூடிய அளவு தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெம்டெசிவர் மருந்து போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், கொரோனா தொற்றால் அதிக பாதிப்புள்ள நபர்களுக்கு மட்டும் அதை பயன்படுத்தி வருவதாகவும், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி தெரிவித்துள்ளார்.