கோவை மாவட்டத்தில், மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவிருக்கின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது.
கோவை: கோவை மாவட்டத்தில், மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவிருக்கின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சுற்றுக்கு, 20 மின்னணு இயந்திரங்கள் வீதம் ஓட்டு எண்ணிக்கை நடத்தவும், மற்ற தொகுதிகளில் சுற்றுக்கு 14 மின்னணு இயந்திரம் வீதம் ஓட்டு எண்ணிக்கை நடத்தவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 600 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி, நேற்று அந்தந்த தொகுதிக்குரிய மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடந்தது.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவரும், மே இரண்டாம் தேதி காலை 6:00 மணிக்குள், எண்ணிக்கை மையத்துக்கு வந்து விட வேண்டும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தினர். எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவருக்கும், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 29ஆம் தேதி, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று, பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாக, மீண்டும் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும், அலுவலர்கள் தெரிவித்தனர். சித்தாபுதூர் அரசு பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனும், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில், தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரும் தலைமை வகித்தனர்.