திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் குவிந்தனர். மக்களின் அலட்சியப்போக்கு, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் குவிந்தனர். மக்களின் அலட்சியப்போக்கு, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தத் தடுப்பூசிகளை முதல் முறை செலுத்திக்கொண்ட பொதுமக்கள் இரண்டாம் முறை செலுத்திக் கொள்ள மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் நாடு முழுவதும் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், புதிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொதுமக்களும் அதிக அளவில் அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வதால், கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களை வரிசையில் வரவேண்டுமென உத்தர விட்டாலும், அதனை பொதுமக்கள் யாரும் கடைபிடிப்பதில்லை. அலட்சியத்தோடு, கும்பலாக நின்று கொண்டு மருத்துவ ஊழியர்களிடம் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்த காவல் துறையை பாதுகாப்புக்கு அழைத்து, டோக்கன் வழங்கி தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து வருகிறது.