திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வழங்காத அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 58, பனியன் தொழிலாளி. சில ஆவணங்களைக் கேட்டு பல்லடம் பொது தகவல் அலுவலருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், மூன்று மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால், அதே ஆண்டு மே மாதம் மேல்முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பித்தார். அதிலும் அரைகுறையான பதிலே கிடைத்தது.
இந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் மேல்முறையீடு செய்தார். உதாரணமாக மேல்முறையீட்டு மனுவின் மீது தொலைபேசி மூலம் விசாரணை நடந்தது. ஓர் ஆண்டுக்கு மேலாகியும் விண்ணப்பதாரரின் மனுவுக்கு பதில் கிடைக்காதது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பிறப்பித்த உத்தரவில், ஒரு வார காலத்துக்குள் விண்ணப்பதாரர் கேட்ட தகவல்களை எந்தவித கட்டணமும் இன்றி ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவல்களை அறிக்கையாக தயார் செய்து மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனுதாரருக்கு தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு துணை தாசில்தார் 25,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.