உடுமலைப் பகுதியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கடைகள்... காவல் துறை விசாரணை..!

உடுமலை அருகே நள்ளிரவில் பல கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


உடுமலை: உடுமலை அருகே நள்ளிரவில் பல கடைகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



உடுமலையை அடுத்த கொழுமம் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிமெண்ட் சீட்டுகள் மூலம் மறைக்கப்பட்டு தற்காலிகமாக இந்தக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் இந்த கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.



இதனையடுத்து, உடுமலைப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...