கோவை மலுமிச்சம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை. மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை. மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை ஈச்சனாரி பகுதியிலிருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.

புதிதாகப் போடப்பட்ட நான்கு வழிச்சாலையில் முக்கிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால் ரோட்டில் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இம்மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை மின் விளக்குகள் எரியவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரிய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.