கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் ஆயிரத்தை கடந்து வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அரசு வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 448 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட 452 பேரில் இன்று வரை 385 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவை இ.எஸ். ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் 65 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இதுவரை கிணத்துக்கடவு பகுதியில் 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.