கோவையின் இருவேறு இடங்களில் 10 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை!

கோவை: கோவையின் இருவேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் 10 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையின் இருவேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களில் 10 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (57), ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் சகிதம் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதைப்போல கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளிபாளையம் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இன்று காலை வேலைக்கு வந்த அப்போது கடையின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடையில் வைத்திருந்த 13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கப் பணத்தை காணாமல் போயிருந்தது. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளை அடித்திருப்பதுதெரியவந்தது.இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...