கோவை: கோவையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாவீர் ஜெயந்தி விழா மற்றும் ஊரடங்கு ஒட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கோவை மாநகர பகுதிகளான பீலமேடு, காந்திமாநகர், போத்தனூர், சரவணம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவரிடமிருந்து 85 மதுபாட்டில்கள் ரூபாய் 3000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர தத்திரி இவரது மனைவி லால் முனி இவர்களுக்கு சந்திரகுமாரி (14) என்ற மகள் உள்ளார். சந்திரகிரி தனது குடும்பத்தினருடன் கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று சந்திரகுமாரி பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றார். அப்போது, லால் முனி மகளை அழைத்தார். இதனால் சிறுமி அங்கிருந்து வேகமாக ஓடி வந்தார்.
அப்போது கால் இடரி அங்கு கிடந்த கல் மீது விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை பெற்றோர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.