கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு அபராதம் விதித்ததுடன், விதியை மீறி கடையைதிறந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு விதிமீறல் நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை பேரூர் அருகே பச்சாபாளையத்தில் உள்ள மைதானங்களில் ஊரடங்கை மீறி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் லோடு ஆட்டோவுடன் பச்சப்பாளையம் தசாவதார பெருமாள் கோவில் மைதானத்திற்கு சென்றனர்.
அங்கு தடையை மீறி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிள்களை லோடு ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.
அதேபோல் கோவைபுதூர் சுண்டக்காமுத்தூர் பகுதியில் நேற்று மைதானங்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இது தவிர மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றபோது ராமே கவுண்டன்புதூர் மதுரையில் தடையை மீறி மளிகை கடை திறக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர். கடையின் உரிமையாளர் தங்கராஜ் (58)மீது 144 தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சம் பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது மளிகை கடையை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தாமோதரன் (55) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றபோது கே.கே புதூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தடையை மீறி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீதும் 144 தடை உத்தரவை மீறுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.