கோவை: பயணிகள் இல்லாமல், சரக்குகளும் இன்றி, கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானம் இன்று காலியாக திரும்பிச் சென்றது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் ஷார்ஜாவுக்கு இயக்கப்பட்ட 'ஏர் அரேபியா' விமானம் காலியாக திரும்பிச் சென்றது. இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது:
“ஐக்கிய அரபு நாடுகளில் பத்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அந்நாட்டு மக்கள் மட்டும் பயணிக்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை- ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள்,இயக்கப்படும் 'ஏர் அரேபியா' நிறுவனத்தின் விமானத்தில் பயணிகளுடன், தமிழகத்தில் இருந்து பூக்கள், மாம்பழம் உள்ளிட்டவையும் ஏற்றிச் செல்லப்படும்.
ஆனால், நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் வழக்கமாக தென் மாவட்டங்களில் இருந்து பூக்கள், சேலத்திலிருந்து மாம்பழம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
சரக்குகளை பேக்கிங் செய்ய தொழிலாளர்கள் வராத காரணத்தாலும் இன்று காலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் சரக்குகள் எதுவும் ஏற்றப்படவில்லை. வழக்கமாக அனுப்பப்படும் இன்ஜினியரிங், தொழில்துறை உபரகணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன் பதிவு செய்யப்படவில்லை.
இந்த விமானத்தில் அதிகபட்சம் 3 டன் வரை சரக்குகள் ஏற்றப்படும். தற்போது இங்கிருந்து பயணிகள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தால் 9 டன் வரை சரக்குகள் வாய்ப்பு உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை கோவையில் தரையிறங்கிய இந்த விமானத்தில், ஷார்ஜாவிலிருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.” இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.