வால்பாறை: வால்பாறையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு நகராட்சி சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று வெகு வேகமாகப் பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மக்களும் வியாபாரிகளும் கடைப்பிடிக்கிறார்களா என்பதை நகராட்சி சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வால்பாறை பிரதான சாலையில் நகராட்சி அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவது கூடாது என்று எச்சரித்தனர். சாலையில் செல்லும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணியாதவர்களை எச்சரித்தும் முகக்கவசம் அணியாத அனைவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.