கோவை: வால்பாறையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வாகன விதிமுறைமீறல்கள் நடப்பதால் அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, ஒரே வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் பயணம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் முருகையா தலைமையிலான குழுவினர் வால்பாறை காந்தி சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் அதிகப்படியான பயணம் செய்தவர்கள் ஆகியோரை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்த வாகன தணிக்கை சோதனை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.