கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் பணம் உள்பட மதுபாட்டில்கள் கொள்ளை!

கோவை: கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 11 லட்சம் ரூபாய் பணம் உள்பட மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஊரடங்கை பயன்படுத்தி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 11 லட்சம் ரூபாய் பணம் உள்பட மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொரோனோ வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில், முழு ஊரடங்கை பயன்படுத்தி கோவை லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே இருந்த 10.72 லட்சம் ரொக்கம் மற்றும் 3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறும் போது, சனிக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளக்கிழமை வருமானம் 3 லட்சம் ரூபாய் மற்றும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை ஒன்பது மணி வரை வருமானம் ஏழு லட்சம் ரூபாய் உள்பட 10.72 லட்சம் ரூபாய் பணத்தை கடையினுள் வைத்து பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று மதியம் வழக்கம் போல் கடையை திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.



இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கடையின் கல்லாபெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை உறுதி செய்ததோடு, அருகிலிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.



மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...