தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேட்டி..!

நீலகிரி: தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக அளவாக 47 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தேவையான அளவிற்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் பள்ளிகளிலும் போதுமான அளவில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.


நீலகிரி: தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக அளவாக 47 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தேவையான அளவிற்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் பள்ளிகளிலும் போதுமான அளவில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ‘‘45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும். இரண்டாம் டோஸ் செலுத்தியவர்களுக்கு பெரும்பாலும் தொற்று கண்டறியப்படவில்லை. அதனால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மே 1-ஆம் தேதிக்குப் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது. ஆக்ஸிஜன் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதுமட்டுமல்லாமல் தற்பொழுது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் பள்ளிகளிலும் தயார்நிலையில் படுக்கைகள் உள்ளன. மே இரண்டாம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்ற சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.'' என்று தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...