வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருவதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேரள எல்லையான மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நகராட்சி சுகாதாரத் துறையினர் சளி பரிசோதனை செய்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை கேரள எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை தேயிலை தோட்டத்தில் வசிக்கும் மக்கள், தமிழ்நாடு எல்லைப்பகுதியிலுள்ள சோலையார் அணை பகுதியிலிருந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது தமிழ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா எல்லைப் பகுதியான மழுக்குப்பாறைக்கு மக்கள் சென்று வர அரசு தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக மழுக்குப்பாறை பகுதியில் இரு பகுதியிலும் இரண்டு மாநில காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து, தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக கேரளப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.