வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர் வேலூரில் தற்கொலை!

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


வால்பாறை: வால்பாறை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய ஜான்சன் என்பவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய பவுன்ராஜ் என்பவர் ரூ.15.62 கோடி நகராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்,

பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக இருக்கும் காந்தி குமார் வால்பாறை ஆணையராக கூடுதல் பொறுப்பேற்று உள்ளார், மேலும் வால்பாறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன் சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

வால்பாறையில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கணக்கு பரிசோதனை ஆய்வு செய்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை முக்கியமானதாகும். இந்த நிலையில் ஜான்சனை பணி மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார். அவரது மொபைல் எண்களை தொடர்பு கொள்ள முடியாதபடி அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் ஜான்சன் வேலூரில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...