திருப்பூர்: திருப்பூர் வேட்டுவப்பாளையம் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை சரி செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் வேட்டுவபாளையம் கிராமத்தில் வசித்து வரும் ஷீலாதேவி என்பவரது வீட்டில் வசித்து வரும் சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு கழிவுநீர் தொட்டியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துர்நாற்றத்துடன் கூடிய விஷ வாயு வெளி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதனை சரிசெய்ய கோரி பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வேட்டுவபாளையம் பஞ்சாயத்து தலைவரிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் உடனடியாக அவற்றை சரி செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதையடுத்து, உடனடியாக காவல் பணியில் இருந்த காவலர்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.