மேட்டுப்பாளையம் நில ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை... கோவை ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு..!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் நில ஆக்கிரமிப்பை தடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பெள்ளாதி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் கருப்பராயன் கன்னிமார் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நீர் வழிப் பாதையை மூடியுள்ளதால், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் வழிப்பாதை மற்றும் செக் டேம் தடை படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக் குழு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழிப் பாதை தடைப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் உள்ள விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அவற்றை வீட்டு மனைகளாகப் பிரித்து வீடு கட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையையும் மற்றும் செக் டேம் ஆகியவற்றை பாதுகாப்பாக மீட்டெடுத்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு சார்பாக ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...