ரமலான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வேண்டும்... கோவை ஆட்சியரிடம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை மனு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பெருமளவில் பரவி வருவதைத் தடுக்க, மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரமலான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பெருமளவில் பரவி வருவதைத் தடுக்க, மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரமலான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெரிதளவு பரவி வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் குறிப்பாக மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டு இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான ரமலான் மாதத்திற்கான சிறப்பு தொழுகையை மேற்கொள்ள இரவு நேரத்தில் அனுமதி அளிக்குமாறு ஏற்கெனவே கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

இந்தநிலையில், வழிபாடுகளுக்கு தடை என்கிற அறிவிப்பு என்பது இஸ்லாமியர்களைப் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட இயலாமல் போனது. இந்த வருடமும் அதேநிலை ஏற்படுவது பெரும் வருத்தம் அளிப்பதாக சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக தெரிவித்தனர்.



மேலும், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் பள்ளிவாசலுக்கு தொழுகை செய்ய வருபவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றி இரவு 10 மணிக்கு முன்னரே தொழுகையை முடித்துக் கொள்கின்றனர். எனவே, இஸ்லாமியர்களின் உணர்வை கருத்தில் கொண்டு சிறப்பு தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழுகைகள் நடைபெறும். ரமலான் சிறப்பு தொழுகைக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...