திருப்பூர்: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக் கூடிய சூழ்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. அதனடிப்படையில், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதனையே நம்பியுள்ள சலூன் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு சலூன் தொழிலாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி, வாடகை கட்டடத்தில் இயங்கும் கடைகளுக்கு வாடகையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கடைக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

உரிய வழிமுறைகளைப் பின்பற்றி காலை முதல் மதியம் வரை கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, ஆதி மருத்துவர் இயக்கம் மற்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.