திருப்பூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுதல் அனைத்து வங்கிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், திருப்பூர் ஊத்துக்குளி சாலை, எஸ்பிஐ வங்கிக்கு இன்று அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து குவிந்தனர்.

பெருகிவரும் கொரோனா இரண்டாம் பேரலையின் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதன்படி, அழகுநிலையங்கள், சலூன்கடைகள், திரையரங்குள் இன்று முதல் செயல்படாது. மேலும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க,போட குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை அனுமதிக்கபடுகின்றனர். காசோலை, வரைவோலை உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வங்கியின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பெட்டியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு வருபவர்கள் வரிசையில் நிற்க தடுப்புகள், காத்திருக்க குடிநீர் வசதியுடன் கூடிய பந்தல் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.