கோவையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 3 சிறுவர்கள் போக்சோவில் கைது.
கோவை: கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவா்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு, உள்ளது. அவர்கள், கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நேற்று காலை 16 வயதான சிறுமி மிதிவண்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 17 வயதான 3 சிறுவா்கள், சிறுமியை கேலி செய்தனா். அங்கிருந்து நகர முயன்ற சிறுமியை மறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சிறுமி கூச்சலிட்டதால், அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவா்கள் 3 பேரையும் பிடித்து பந்தயச் சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து 3 பேரையும் சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.