ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர் இடிந்த விவகாரம். மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்.
கோவை: கோவை பெரியகுளத்தில் தடுப்புச்சுவா் இடிந்து விழுந்த விவகாரத்தில், 2 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஸ்மாா்ட் சிட்டிnதிட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் பகுதி சேரன் நகரில், குளக்கரையை ஒட்டி 15 அடி உயரம், 75 அடி நீளத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவா், கடந்த 14 ஆம் தேதி பெய்த மழையால் இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடா்பாக, மாநகராட்சி உதவி பொறியாளா் கல்யாண சுந்தரம், உதவி நிா்வாக பொறியாளா் உமாதேவி ஆகியோரிடம் மாநகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டது., அவா்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால், இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் பெ. குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டாா்.