கோவையில் மூதாட்டியை கொலை செய்த பிறகு கற்பழித்தேன், கைதான காமகொடூரன் பரபரப்பு வாக்குமூலம்.

கோவையில் மூதாட்டியை கொலை செய்த பிறகு கற்பழித்தேன், கைதான காமகொடூரன் பரபரப்பு வாக்குமூலம்.


 கோவை: கோவை பன்னிமடை பகுதியில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்கப்பட்டு மூதாட்டி இறந்து கிடந்தார். இந்தநிலையில்்் துடியலூர் போலீசார் ஆதாயக் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இன்று வழக்கில் கைதான குற்றவாளி மூதாட்டியை கொலை செய்த பிறகு, அவரை கற்பழித்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

பன்னிமடை பகுதியில் வசிப்பவர் முத்துலட்சுமி வயது 70. இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு பகுதியில் வசிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி மூதாட்டி வீட்டுக்குள் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து மூதாட்டியின் மகள் உஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியது என்னுடைய அம்மா தனிமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. நான் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தேன். வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது என் தாயார் நகைகளை இழந்து இறந்து கிடந்தார் என புகார் செய்திருந்தனர். 

தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் துடியலூர் போலீசார் பன்னிமடை பகுதியில் வைத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் 27, என்பவரை கைது செய்தனர். 

அப்போது அவர் போலீசில் கூறியதாவது:- என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை. குடும்ப வறுமை காரணமாக கோயம்புத்தூரில் வந்து பன்னிமடையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறேன். முத்துலட்சுமி பாட்டி என் வீட்டிற்கு அருகாமையில் இருந்தார். எனக்கு பசிக்கும் போதெல்லாம் உணவு அளித்து வந்தார். கொரோனா காரணமாக எனக்கு வேலை இல்லாமல் போனது. ஆதலால் வறுமை வாட்டியது. அப்போது பாட்டி அணிந்திருந்த நகை எனக்கு உருத்தியது. ஆதலால் 15ஆம் தேதி அவர் தனியாக இருக்கும்போது சுவர் ஏறி குதித்து அவர் வீட்டிற்குள் நுழைந்தேன். 

சத்தம் கேட்டு, பாட்டி கூச்சலிட்டார். அதனால், உடனடியாக பாட்டியின் கழுத்தை நெறித்து கொன்றேன். பின்னர், நகையை திருடினேன்.

இறந்த பிறகு அந்த பாட்டி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. ஆதலால், இறந்த பாட்டியை கற்பழித்தேன் என காமக்கொடூரன் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளி மீது 302 மற்றும் திருட்டு வழக்கு பதிவு செய்த போலீசார் இப்பொழுது 376 கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...