கோவை கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மீண்டும் வாட்ச் டவர் அமைக்கத் திட்டம்..!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க இப்பகுதிகளில் மீண்டும் வாட்ச் டவர் அமைத்து கண்காணிக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க இப்பகுதிகளில் மீண்டும் வாட்ச் டவர் அமைத்து கண்காணிக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது. கோவை மாவட்டத்தில் தினமும் 800 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருமண நிகழ்வுகள், விசேசங்கள் போன்றவற்றிக்காக விடுமுறை நாட்களில் கோவையில் உள்ள கடைத்தெருக்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமை கடைத்தெருக்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வருவாய்த் துறை, காவல் துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கூட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த முறை வாட்ச் டவர் அமைத்தது போல் இந்த முறையும் வாட்ச் டவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கோவை மாநகர் பகுதியில் உள்ள அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க கடைத்தெருக்களில் முக்கிய வீதிகளில் வாட்ச் டவர் அமைக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...