முழு ஊரடங்கால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய ஈச்சனாரி விநாயகர் கோயில்!

கோவை முழு ஊரடங்கு காரணமாக ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.


கோவை : முழு ஊரடங்கு காரணமாக ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது மக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகள் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமான ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று அதிகாலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சகர்கள் மட்டும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தாலும் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.



இருந்தாலும் அவ்வப்போது அவ்வழியாக செல்பவர்கள் மட்டும் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

மேலும், முழு ஊரடங்கு எதிரொலியாக பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை இன்று முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஈச்சனாரி எல்& டி பைபாஸ் சாலை, மலுமிச்சம்பட்டி நால்ரோடு, ஈச்சனாரி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலங்கள் அனைத்தும் வாகன போக்குவரத்து இல்லாமல் மயான அமைதி போல காட்சியளித்தன.



அதேபோல், கிணத்துக்கடவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ,காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடியது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் மார்க்கெட் நடைபெற்று வந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று கிணத்துக்கடவு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமலும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல்,கிணத்துக்கடவு நகர பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன..

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...