தமிழகத்தில் முழு ஊரடங்கு... பொள்ளாச்சியில் வெறிச்சோடிய சாலைகள்..!

பொள்ளாச்சி: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக இன்று பொள்ளாச்சியில் வெறிச்சோடிய சாலைகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


பொள்ளாச்சி: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக இன்று பொள்ளாச்சியில் வெறிச்சோடிய சாலைகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை, உடுமலை சாலை, மத்தியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.



போலீஸார் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் தற்காலிகமாக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அத்தியாவசியமான மருந்துக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. வருவாய்த் துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...