திருப்பூரில் முழு ஊரடங்கு... தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைப்பு..!

திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் இன்று தமிழகமெங்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.



மேலும், சாலைகளில் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்வதைக் கண்காணிக்கும் வகையில், காவல் துறையினர் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...