பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி அருகே உள்ள கோபால்சாமி மலைக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருவது வழக்கம்.
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆன்மீக தலங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கலக்குறிச்சி அருகே உள்ள கோபால்சாமி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோயில் நுழைவாயிலில் வனத்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.