தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கம்பைன்டு என்ஜினீயரிங் சப் ஆர்டினேட் சர்வீஸ் பணி காலியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு வருகிற 6-6-2021ஆம் தேதி அன்று நடக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அடுத்த மாதம் (மே) முதல் இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழு விவாதம், பாட வாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இலவச பயிற்சி வகுப்பு குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.'' என்று தெரிவித்துள்ளார்.