கோவையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவரை சில நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து கோவை 34 வது வார்டு கண்காணிப்பாளர் மாசானம் தலைமையில் ஊழியர்கள் செல்வராஜ் வீட்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே சென்று இருப்பது தெரிய வந்தது .இதையடுத்து இது குறித்து மாசாணம், பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது நோய் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.