பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல்... அமலுக்கு வந்தது இந்தாண்டின் முதல் ஊரடங்கு..!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக முதல் ஊரடங்கு போடப்பட்டது. பிறகு, நோய்த்தொற்றுப் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலைப் பரவலால் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக முதல் ஊரடங்கு போடப்பட்டது. பிறகு, நோய்த்தொற்றுப் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலைப் பரவலால் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் ஊரடங்கு போடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் நோய்த் தொற்றுப் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தொடர் ஊரடங்கு காரணமாக பலர் வேலைகளை இழந்து சொந்த ஊருக்குத் திரும்பினர். வேறு மாநிலங்களில் இருந்து கூலித் தொழிலுக்காக இங்கு வந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முறையான போக்குவரத்து வசதி கிடைக்காமல் நடந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. பலர் உண்ண உணவு இல்லாமல் நம் கண் முன் மாண்டனர்.



பின்னர், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றப்பட்டது. கட்டாயம் முகக் கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் கடைப்பிடித்தல் என்று பல விதிமுறைகள் தீவிரமாகப் பின்பற்றியதன் மூலம் நோய்த் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது. இருந்தாலும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க பல விதிமுறைகளைப் பின்பற்ற அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொதுமக்கள் அலட்சியம் காட்டத் தொடங்கி, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை மறந்து இயல்பாக இருக்கத் தொடங்கினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் என்று தொடர்ந்து மக்கள் கூடும் நிகழ்வுகள் நடந்தன. அதில், நோய்த் தொற்று தடுப்பு விதிமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படவில்லை. அப்பொழுதே தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 500-க்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது.

தேர்தல் முடிந்த பின்னர் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை, திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி, திரையரங்கு மால் போன்ற இடங்களில் 50 சதவிகித மக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

அதனைத் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் சிகிச்சை பெற போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இன்றியும், சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் இன்றியும் நாடு முழுவதும் பலர் இறந்துள்ளனர். இதில் முன் களப்பணியாளர்கள் ஆன ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மற்றும் மருத்துவப் பணியில் ஈடுபட்டோர் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளனர்.



தமிழகத்தில் நாளொன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசிகளுக்கு விலையை நிர்ணயித்து இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் நாளை காலை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்காகும். முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் ஆங்காங்கே வெளியில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் பொதுமக்களை வீட்டிற்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...