2000 த்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வால்பாறையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை : 2000த்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வால்பாறையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், சந்தை பகுதி, சிறு குறு கடைகள் என சுமார் 2000 க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வால்பாறையில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய சேவைகள் தவிர ஆட்டோ, டாக்ஸி மற்றும் வேன்கள் இயங்கவில்லை.

காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.