சாதாரண உடைகளுக்கான தேவை அதிகரிப்பால் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

வீட்டிலிருந்தே பணி செய்யும் முறையால் டீ ஷர்ட், ஷார்ட்ஸ் உள்ளிட்ட சாதாரண உடைகளுக்கான தேவை அதிகரிப்பால் திருப்பூர் ஜவுளி தொழில் துறையினருக்கு சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


திருப்பூர் : வீட்டிலிருந்தே பணி செய்யும் முறையால் டீ ஷர்ட், ஷார்ட்ஸ் உள்ளிட்ட சாதாரண உடைகளுக்கான தேவை அதிகரிப்பால் திருப்பூர் ஜவுளி தொழில் துறையினருக்கு சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்திருக்கின்றன.

இதன் காரணமாக வீட்டில் இருக்கும் போது அணியும் வழக்கமான உடைகளையே பெரும்பாலும் அணிகின்றனர். எனவே அது போன்ற ஆடைகள் வாங்கும் பழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.

இதனால், ஆண்கள், பெண்கள்இருதரப்பினரும் அணியும் டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் போன்ற கேசுவல் ஆடைகள் உள்ளிட்டவற்றுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்(TEA) தலைவர் ராஜா எம் சண்முகம் கூறியதாவது,

"நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்திருக்கின்றனர். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் கேஷுவல் வியர் என்று சொல்லக்கூடிய துணி வகைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான அலுவலக கூட்டங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. அலுவலகத்துக்கு செல்லும் போது டிப் டாப் ஆக உடை அணிபவர்கள் ஆன்லைன் பணியால் பார்மல் சட்டைகள் போல காட்சி அளிக்கும் டீசர்ட் கள் விரும்பி அணிகின்றனர்.

பெண்களுக்கான 'நீ டாப்'(Knee Top) டி-ஷர்ட் என்று சொல்லக்கூடிய ஆடைகள் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆடைகளை பெண்கள் அலுவலக ஜூம் மீட்டிங் களுக்காக மட்டுமின்றி தினசரி பயன்பாட்டுக்கும் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த துணி வகைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

கடந்த 2019 - 20 நிதியாண்டில் திருப்பூரில் மொத்தம் 27 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வணிகம் இருந்தது. 2020 - 21 முதல் இரண்டு மாதங்கள் நோய்த் தொற்று பரவல் காரணமாக முடங்கிய நிலையில்மீதமுள்ள 10 மாதங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது.

நோய் தொற்று முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தொழில்துறையினர் மெல்ல மீண்டு வர தொடங்கிய நிலையில் தற்பொழுது நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது ஒட்டுமொத்த திருப்பூர் ஏற்றுமதி தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டாவது அலை பரவல் காரணமாக ஏற்றுமதி ஆர்டர்கள் பாதிக்குமோ என்ற அச்சம் தொழில்துறையினர் மத்தியில் அதிகம் உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதை மனமார வரவேற்கிறோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யும் உதவியை போலவே மக்கள் தன்னம்பிக்கையுடனும் பயமின்றியும் தங்கள் தொழில்களை மேற்கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...