வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் - சுகாதாரத் துறையினர் வேண்டுகோள்!

கோவை: கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில வாரங்களாக நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் துரித தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதும் வால்பாறை வரும் பயணிகளை சுகாதாரத்துறை, வனத்துறை,காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மளுக்கப்பாறை மற்றும் ஆழியாறு சோதனைச்சாவடிகளில் முறையாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுவரை வால்பாறைப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் இன்று வால்பாறையிலுள்ள துளசிங்க நகரில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுபோன்ற தொடர் நிலை நீடிக்காமல் இருக்க சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...