கோவை: கோவையில் ரூ 1.80 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை இறுதியில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை கேரள மாநிலம் கொச்சி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட உதயம் பேரூர் போலீசார் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சிலரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதனிடையே, அவர்கள் அளித்த தகவலின் பேரில் உதயம் பேரூர் போலீசார் கடந்த 21ம் தேதி இரவு கோவை கரும்புக்கடை தெற்கு உக்கடம் அல்-அமீன் காலனி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ 1.80 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து கேரள போலீசார் அழைத்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் கேரளாவில் உள்ள கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது போல கோவையிலும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது. விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, கள்ள நோட்டு கும்பல் மேற்கண்ட பகுதியில் பதுங்கியிருந்து நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதே கேரள போலீசார் நடத்திய சோதனைக்கு பின்னரே கோவை மாநகர போலீசாருக்கு தெரியவந்தது. உளவுத்துறை போலீசாரும் இந்த கும்பல் பற்றி விவரங்களை முன்னரே சேகரிக்க தவறியுள்ளனர். இதை மாநகர உயரதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, கள்ள நோட்டு கும்பல் செயல்பாடுகள் குறித்து மாநகர உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது, கள்ள நோட்டு கும்பல் எத்தனை மாதங்கள் மேற்கண்ட இடத்தில் தங்கி இருந்தனர். அவர்களின் கூட்டாளிகள் வேறு யார் யார் உள்ளன கோவையில் கள்ள நோட்டு கும்பல் எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளன என்பது போன்ற விவரங்களை சேகரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதியில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.