கோவை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய வாகனங்கள் தவிர வேற எந்த வாகனமும் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர எல்லையில் 12 சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் இன்று இரவு 10 மணி முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகரில் தற்காலிகமாக கூடுதலாக 22 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்.
எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசு அறிவித்துள்ள உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல கோவை புறநகரில் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாநகரில் கடந்த 12ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் இரவு 10 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றித் தெரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 14-ஆம் தேதி இரவு முதல் 10 மணிக்கு மேல் வாகனங்கள் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மொத்தமாக மாணவர்கள் இதுவரை 260 பேர் மீது வழக்கு பதிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் கோவை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.