கோவை: வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. காசி விசுவநாதர் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டார்.
தொடர்ந்து நந்தி தேவர் துர்கா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாதஸ்வரம் மேளங்கள் முழங்க காசி விஸ்வநாதருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெண்கள் சிவனைப் போற்றிப் பாடினர்.
பின்னர், சிவபெருமான் பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு காசி விஸ்வநாதரை தரிசித்தனர்.