கோவை: கொரோனா தடுப்பூசி விலையை உயர்த்தக் கூடாது என தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பால் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி, பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. மக்களுக்கு சேவையாற்றிட ஐ.எம்.ஏ., தயாராக உள்ளது. கொரோனா நோயாளிகள், கொரோனா பாதிக்காத நோயாளிகளுடன் சேர்க்கப்பட கூடாது. குறைந்தளவு வசதிகள் உள்ள மருத்துவமனைகளை, கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றி, முறையாக கண்காணிக்க வேண்டும்.
ரெம்டெசிவிர் உள்ளிட்ட, அனைத்து இன்றியமையாத மருந்துகளும் தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், விநியோகிக்கப்பட வேண்டும். உள்ளூர் ஊராட்சி அமைப்புகள், மருத்துவ நிறுவனங்களுக்கு கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என, அபராதம் விதிக்கின்றன.இதை தடுக்க வேண்டும். தடுப்பூசியின் விலையை மாநில அரசு தற்போது உள்ள, ரூ.250 விலையில் இருந்து அதிகரிக்க கூடாது. அதிகளவு திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டமைப்பை ஏற்படுத்த, உடனடியாக மானிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அரசு கொரோனா பரிசோதனைக்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., உள்ளிட்ட பரிசோதனை உபகரணங்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்று எப்.எம்.ஜி., தேர்வு எழுதியவர்களை, கொரோனா பணிகளில் பயன்படுத்தலாம்.” இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.