பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுக சார்பில், கொரோனா தொற்று பாதுகாப்பு மருத்துவ பெட்டகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மருத்துவ பெட்டகங்கள் வழங்க வேண்டும் என்றும், திமுக நிர்வாகிகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், பொள்ளாச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் 5000 குடும்பங்களுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஜலத்தூர் கிராமத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கோவை தெற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான மருத்துவ பெட்டகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.