கோவையில் மின்சாரம் தாக்கி மற்றும் தடுப்புச்சுவரில் மோதி இருவேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் பரிதாப உயிரிழப்பு!

கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி மற்றும் தடுப்புச்சுவரில் மோதி இருவேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் பரிதாப உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி மற்றும் தடுப்புச்சுவரில் மோதி இருவேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் பரிதாப உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதுக்கரையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக சென்ற மின்சார வயரை எதிர்பாராதவிதமாக தொட்டார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (59). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை இவர் தனது மொபட்டில் கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் இன்று பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...