கோவையில் கொரோனா தேவையை முன்னிட்டு தொழில் நிறுவனங்களுக்கான ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தம்!

கோவை: கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு தினமும் வழங்கப்பட்ட 10,000கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு, மருத்துவ உபயோகத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.


கோவை: கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு தினமும் வழங்கப்பட்ட 10,000கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு, மருத்துவ உபயோகத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

தொழில் நகரான கோவையில் தினமும் 10 ஆயிரம் கியூபிக் மீட்டருக்கும் அதிகமான ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு மருத்துவ உபயோகத்திற்கு மட்டும் ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. இதனால் கோவை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின்(RASA) தலைவர் சுருளிவேல் கூறியதாவது;



"தொழில் நிறுவனங்களில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் லேசர் கட்டிங், பேப்ரிகேஷன் வேலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆக்சிஜன் வாயு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்பொழுது தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இரண்டு அல்லது மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதே நேரத்தில் முகவர்கள் அதிகம் உள்ளனர். தடையை மீறி தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர தொழில் நிறுவனங்களின் தினசரி கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகள் தணிக்கை செய்யப்படுகின்றன. நோய் தொற்று காரணமாக மருத்துவமனைக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என்பதை வரவேற்கிறோம்.

இருப்பினும் தொழில் வளர்ச்சியும் முக்கியமாகும். எனவே தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொழில் நிறுவனங்கள் மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.



கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க(COTMA) தலைவர் சிவகுமார் கூறுகையில், "தற்போது உள்ள சூழலில் மனிதர்களின் விலைமதிப்பில்லா உயிர்களை காக்க போதுமான அளவு ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் தொழில் துறையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்றார்.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புக்கும் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்பொழுது தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...