கோவை: கோவையில் கணவன் குடிபோதையில் அடித்து துன்புறுத்துவதுடன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் பெண் கால்நடை மருத்துவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெண் கால்நடை மருத்துவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
“திருமணத்தின் போது எனது பெற்றோர்கள் வரதட்சணையாக 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 லட்சம் கொடுத்தனர். அவருடன் திருமணமான நான்காவது நாளில் எனது கணவருக்கு போதைப்பழக்கம் இருப்பதும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். நகைகளை அடகு வைத்து செலவு செய்துவிட்டு திருப்பித் தர மறுக்கின்றனர்.
மேலும் எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனடிப்படையில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கால்நடை மருத்துவரின் கணவர் அவரது குடும்பத்தினர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.