கோவை: கோவை கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 3 மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்
இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 415 பேரில் இன்று வரை 383 பேர் குணமடைந்து உள்ளனர். மீதமுள்ள 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு பகுதியில் 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் சமித்தா, அருண் பிரகாஷ்,திலீப்குமார், முகில்வண்ணன் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய 3 மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மேலும் கொரோனா பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவ பரிசோதனை செய்வது போன்ற பணிகளில் இந்த மருத்துவ குழுவினர் செய்து வருவதாக சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.