கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் கணிசமான அளவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கிணத்துக்கடவு நகரம், ஜக்கார்பாளையம், சிங்கையன்புதூர், தாமரைகுளம், வடசித்தூர்,கோப்பனூர்புதூர், சிறுகளந்தை, சூலக்கல்,கக்கடவு ஆகிய பகுதிகளில் 6 ஆண்களுக்கும், 6 பெண்களுக்கும் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும், இதுவரை கிணத்துக்கடவு பகுதியில் 415 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு 383 பேர் குணமடைந்து உள்ளதாகவும், மீதமுள்ள 32 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்தனர் கடந்த ஒரு வருடத்தில் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.