கோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆர்.எஸ்.புரம் மலர் அங்காடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை தற்காலிகமாகத் திறக்கப்பட்டு, அங்கு 50 கடைகளில் வியாபாரம் மேற்கொள்ள பூ வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. அதில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் பூ மார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனை அடுத்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்க பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. தற்காலிகமாக அங்கு கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அண்மையில் மீண்டும் பழைய பூ மார்க்கெட் பகுதியிலேயே வியாபாரம் மேற்கொள்ள பூ வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணி, கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. இந்தப் பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 100 சதவிகிதம் நிறைவடைந்தன. இங்கு அமைக்கப்பட்ட புதிய கடைகள் ஏலம் மூலம் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், ஆர்.எஸ். புரம் பூ மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் புதிய பூ மார்க்கெட் வளாகத்தில் பூ வியாபாரிகள் 50 கடைகள் வரை வியாபாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இதனால் பழைய பூ மார்க்கெட் பகுதியில் பாதி கடைகளும், புதிய வளாகத்தில் பாதி கடைகளும் இயங்கும். தனி மனித இடைவெளி பின்பற்றப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய பூ மார்க்கெட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.'' என்றார்.