உடுமலையில் 5 நாட்களுக்குப் பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வருகை..! சிறிது நேரத்தில் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம்!

கோவை: உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


கோவை: உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தடுப்பூசிகள் தீர்ந்து போனது. தடுப்பூசிகள் எப்போது வரும் என தெரியாமல் சுகாதார ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இன்று 203 பேருக்கு செலுத்தக்கூடிய கோவிட்சில்டு தடுப்பூசி மட்டுமே வந்தது. அதுவும் ஒரு சில மணி நேரங்களில் இரண்டாம் கட்ட ஊசி செலுத்தும் நபர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது புதிதாக வந்த ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடிந்தது. அதற்குள் தடுப்பூசி அனைத்தும் தீர்ந்து போனது. இதனால் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...