கோவை வருமானவரித்துறை பணியாளர்களுக்கு கொரோனா... ரேஸ்கோர்ஸிலுள்ள மண்டல அலுவலகம் பூட்டப்பட்டது..!

கோவை: கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் சிலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அந்தத் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மண்டல அலுவலகம் பூட்டப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் சிலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அந்தத் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மண்டல அலுவலகம் பூட்டப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸில் வருமானவரித்துறை மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் எட்டாவது தளத்தில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தத் தளம் முழுக்க உள்ள அலுவலகம் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியிலிருந்த பிற பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று இல்லை.

வருமானவரித்துறை அலுவலகத்தில் நுழையும் ஒவ்வொருவரும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி, உடல் வெப்ப நிலை பரிசோதித்த பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிப்பதில்லை. சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில், எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து, அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...