கொரோனா தடுப்பு நடவடிக்கை... ஆழியார் சோதனைச் சாவடியில் வாகனச்சோதனை..!

கோவை வால்பாறை: வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறைக்கு வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.


கோவை வால்பாறை: வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறைக்கு வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று வரை 27 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையிலும் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள் செல்ல தடை விதித்த நிலையில், வால்பாறை ஆழியார் சோதனைச் சாவடியில் டிஎஸ்பி விவேகானந்தன் உத்தரவுக்கிணங்க வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, ஆழியார் சோதனைச் சாவடியில் காவல்துறையினர், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர் இணைந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களைப் பரிசோதனை செய்து வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலையை அறிந்து முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வால்பாறைக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலம் வருபவர்களை கண்காணித்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...